உள்ளூர் செய்திகள்
அரசு பள்ளிகளில் மருத்துவ முகாம்
- திருப்பத்தூர் ஒன்றியத்தில் அரசு பள்ளிகளில் மருத்துவ முகாம் நடந்தது.
- முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு கண் மற்றும் தோல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட நெற்குப்பை கோட்டையிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலை பள்ளிகளில் படிக்கும் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நெற்குப்பை ஆரம்ப சுகாதார மையத்தின் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
இந்த முகாமில் 404 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு கண் மற்றும் தோல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
ரத்த சோகை கண்டறியப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனைகளும், மருந்துகளும் வழங்கப்பட்டது. இதில் டாக்டர் ேஹமலதா, கண் மருத்துவர் ராதிகா, தோல் மருத்துவர் முத்துசாமி, உதவியாளர் வெற்றிவேல், ஆய்வக நிபுணர் கவுதமன், வள்ளிக் கண்ணு, கற்பகவல்லி, வள்ளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.