உள்ளூர் செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சிகள். 

நாட்கணக்கில் வைத்து விற்கப்படும் இறைச்சிகள்

Published On 2022-12-31 07:18 GMT   |   Update On 2022-12-31 07:18 GMT
  • தேவகோட்டையில் நாட்கணக்கில் வைத்து விற்கப்படும் இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
  • ஷாகுல் அமீது என்பவர் 10 நாட்களுக்கு மேல் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை விற்பது தெரியவந்தது.

தேவகோட்டை,

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் 1 லட்சத்திற்கும் மேலான மக்கள் வசித்து வருகின்றனர்.

இங்குள்ள இறைச்சி கடைகளில் விற்கப்படும் ஆட்டுக்கறி சுகாதாரமற்ற முறையிலும், நாட்கணக்கில் பதப்படுத்தப்பட்டு விற்கப்படுவதாகவும் புகார்கள் வந்தன.

இது தொடர்பாக உணவு பாதுகாப்பு அதிகாரி வேல்முருகன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் உதவியாளர் மாணிக் கம் ஆகியோர் தலைமையில் தேவகோட்டை பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் அதிரடி சோதனை நடத்தி னர்.

அப்போது நகைக்கடை பஜாரில் இறைச்சி கடை நடத்தி வரும் ஷாகுல் அமீது என்பவர் 10 நாட்களுக்கு மேல் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை விற்பது தெரியவந்தது. அவருக்கு சொந்தமாக அண்ணாநகர், ஆறாவயல், வெள்ளையன் ஊரணி ஆகிய பகுதி களிலும் இறைச்சி கடை கள் உள்ளன. இங்கும் கெட்டுப்போன இறைச்சி விற்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மேற்கண்ட 4 கடைகளில் இருந்தும் 1000 கிலோ ஆட்டுக்கறி பறிமுதல் செய்யப்பட்டு சாகுல் அமீதுக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தேவகோட்டையில் இறைச்சி களுக்காக ஆடுகள் அறுக்கும் போது பரிசோதனை செய்து ரசீது வழங்கி கடைகளுக்கு இறைச்சிகளில் சீல் வைத்து அனுப்பப்படுவது வழக்கம்.

ஆனால் இந்த நடைமுறை கடந்த சிலமாதங்களாக பின்பற்றப்படுவது இல்லை. இதனால் சுகாதாரமற்ற நாட்கணக்கில் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் விற்கப்பட்டு வருகிறது. இதனை வாங்கி உட்கொள்ளும் பொது மக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

எனவே இனியாவது நகராட்சி நிர்வாகம் கடுமையாக கண்காணித்து ஆட்டு இறைச்சி விற்ப னைக்கு விதிகளை பின் பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

Tags:    

Similar News