உள்ளூர் செய்திகள்

சிங்கம்புணரி பேரூராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார். அருகில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் உள்ளனர்.

பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்

Published On 2022-10-21 08:12 GMT   |   Update On 2022-10-21 08:12 GMT
  • பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
  • ஒவ்வொரு பள்ளிக்கும் அத்தியாசிய புனரமைப்பு தேவைக்காக ரூ.10 ஆயிரத்தையும் அமைச்சர் வழங்கினார்.

நெற்குப்பை

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியங்களில் உள்ள ஏரியூர், எஸ்.எஸ். கோட்டை, முறையூர், சிங்கம்புணரி, கிருங்காகோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 732 மாணவ- மாணவிகளுக்கு ரூ.37 லட்சத்து 34 ஆயிரத்து 451 மதிப்பீட்டில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

கலெக்டர் மதுசூதனன் ரெட்டி தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் பெரிய கருப்பன் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.

2021-22-ம் ஆண்டு பொதுத் தேர்வில் அந்தந்த பள்ளியில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சொந்த நிதியில் இருந்து முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் மற்றும் ஒவ்வொரு பள்ளிக்கும் அத்தியாசிய புனரமைப்பு தேவைக்காக ரூ.10 ஆயிரத்தையும் அமைச்சர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், மாவட்ட கல்வி அலுவலர் சண்முகநாதன், திருப்புவனம் பேரூராட்சி சேர்மன் வேங்கை மாறன், சிங்கம்புணரி வட்டாட்சியர் சாந்தி, சிங்கம்புணரி பேரூராட்சி சேர்மன் அம்பலமுத்து, துணை சேர்மன் செந்தில், முறையூர் ஊராட்சி மன்ற தலைவர் என்.எம்.சுரேஷ், கிருங்கா கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் அகிலா கண்ணன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News