உள்ளூர் செய்திகள்

மானாமதுரை நகராட்சி அலுவலகத்தில் தூய்மைப்பணியாளர்கள் மேம்பாட்டு திட்ட சிறப்பு கணக்கெடுப்பு முகாம் நடைபெற்றபோது எடுத்தபடம்.

தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்ட சிறப்பு கணக்கெடுப்பு முகாம்

Published On 2023-10-19 08:13 GMT   |   Update On 2023-10-19 08:13 GMT
  • தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்ட சிறப்பு கணக்கெடுப்பு முகாம் நடந்தது.
  • வேல்முருகன், சண்முகப்பிரியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட் டுத்திட்ட சிறப்பு கணக்கெ டுப்பு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு நகர்மன்றத் தலைவர் எஸ்.மாரியப்பன் கென்னடி தலைமை தாங்கி னார். ஆணையர் ரெங்கநா யகி முன்னிலை வகித்தார்.

இதில் மானாமதுரை நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். தமிழக அரசு தூய்மைப் பணியா ளர்களுக்கு பல்வேறு திட் டங்களை செயல்படுத்துவ தற்காக அவர்களுக் கான மேம்பாட்டுத் திட்டத்தை கொண்டுவந்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியான தூய்மைப் பணி யாளர்களை கண்டறிவதற் காக நடைபெறும் கணக்கெ டுப்பு முகாமில், தரைமட்ட கழிப்பறை தொட்டியை தூய்மைப்படுத்தும் பணியா ளர்கள், வாகனங்களில் பணிபுரிவோர், புதை சாக் கடை தூய்மை பணியில் ஈடுபடுவோர், கழிவுநீர் சுத்தி கரிப்பு நிலையம், பொது கழிப்பிடங்களில் பணிபுரி யும் தூய்மைப் பணியாளர் களை சேர்க்க ஆலோசனை வழங்கப்பட்டது.

இந்தக் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடும் ஊழியர்க ளுக்கு அடையாள அட்டை களை நகர்மன்றத் தலைவர் மாரியப்பன் கென்னடி வழங்கினார். கணக்கெடுப் பில் ஈடுபடும் ஊழியர்களிடம் உரிய விபரங்களை தூய்மை பணியாளர்கள் வழங்கி அவர்களுக்கு ஒத்து ழைப்பு வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

முகாமில் நகராட்சிப் பொறியாளர் முத்துக்குமார், துப்புரவு ஆய்வாளர் பாண் டிச்செல்வம், சுகாதார மேற்பார்வையாளர்கள் சிவ ராணி, பிரபு, கார்த்தி, ஹரிணி, தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் காயத்ரி, நகர்மன்ற உறுப்பி னர்கள் வேல்முருகன், சண்முகப்பிரியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News