உள்ளூர் செய்திகள்

டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கிராம மக்கள் பங்கேற்றனர். 

கிராம மக்களுக்கு டெங்கு விழிப்புணர்வு

Published On 2023-05-17 13:39 IST   |   Update On 2023-05-17 13:39:00 IST
  • திருவிடையார்பட்டியில் கிராம மக்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
  • தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

நெற்குப்பை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள திருவிடையார்பட்டி பள்ளி அருகே சுகாதாரத்துறை சார்பில் தேசிய டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. திருப்பத்தூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் செந்தில்குமார் தலைமை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சிவக்குமார், சுகாதார ஆய்வாளர் சகாய ஜெரால்டுராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் நல்ல தண்ணீர், மழை நீர் எங்கு எங்கு தேங்குகிறதோ அதில் ஏடீஸ் கொசுக்கள் உற்பத்தியாகி அதன்மூலம் மக்களுக்கு டெங்கு பரவுகிறது. பொது மக்கள் வீட்டில் உடைந்த குடங்கள், டயர்கள், மண்பானைகள், தேங்காய் கொட்டாச்சி ஆகியவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு தண்ணீர் தேங்கினால் அதில் கொசுக்கள் உற்பத்தி யாகும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

டெங்கு காய்ச்சல் வந்தால் மூட்டுவலி, கை கால் வலி தலைபாரம் போன்றவைகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி பரிசோதனை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது.

Tags:    

Similar News