வைகை ஆற்றின் கரைகளில் சாலை அமைக்க கோரிக்கை
- வைகை ஆற்றின் கரைகளில் சாலை அமைக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
- நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும் எனவும் மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு ஏற்படும்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ஆற்றில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆதனூர் அருகே தடுப்பணை கட்டப்பட்டது. அப்போது ஆற்றின் வைகை ஆற்றின் இரண்டு கரை பகுதிகளிலும் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் தடுப்பணை அமைத்தவுடன் கரை பகுதிகளில் சாலை அமைக்க எவ்வித நடவ டிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது மானாமதுரை வைகைஆற்று பாலத்தில் இருந்து புதிதாக அமைக்க பட்ட ஆதனூர் தடுப்பணை வரை ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த நிலையில் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் தெருக்க ளுக்கு எளிதாக செல்லும் வகையிலும், நடைபயிற்சிக்கு பயன்படும் வகையிலும் ஆற்றின் இருகரைகளிலும் மரகன்றுகளை வளர்த்து சிமெண்ட் அல்லது தார் சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சாலை அமைப்பதன் மூலம் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும் எனவும் மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறையும் எனவும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.