உள்ளூர் செய்திகள்

இளையான்குடி பேரூராட்சி மன்ற கூட்டம் நடந்தது.

ரூ.41 லட்சத்தில் எல்.இ.டி பல்புகள் பொருத்த முடிவு

Published On 2022-12-14 14:06 IST   |   Update On 2022-12-14 14:06:00 IST
  • ரூ.41 லட்சத்தில் எல்.இ.டி பல்புகள் பொருத்த பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் இந்த கூட்டம் நடந்தது.

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பேரூராட்சி மன்றக் கூட்டம் நடந்தது. தலைவர் நஜூமுதீன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் இப்ராகீம், செயல் அலுவலர் கோபிநாத் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும் உறுப்பினர்கள் வார்டுகளில் நிலவும் குறைகளை தெரிவித்து அவற்றை சரி செய்து தருமாறு கூறினர். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு செயல் அலுவலர் கோபிநாத் பதிலளித்தார்.

8-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் செய்யது ஜமீமா பேசுகையில், எனது வார்டில் தக்கட்டை தெருவில் பொதுநிதியில் போர்வெல் அமைப்பதற்கான ஏற்பாடுகள் இன்னும் நடைபெறவில்லை.

கலிபா தெருவில் சிறியதாக உள்ள கால்வாய் பாலத்தை சீரமைக்க வேண்டும். புதிய நூலக கட்டிடம், விளையாட்டு மைதானத்தை இளையான்கு டியில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

இளையான்குடி பேரூராட்சியில் தற்போது செயல்பாட்டில் இருக்கும் 40 வாட்ஸ் ஒளிரும் குழல் விளக்குகள் மற்றும் சோடியம் விளக்குகளை மின்சிக்கனத்தை கருத்தில் கொண்டு அவற்றை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக ரூ41.53 லட்சம் மதிப்பீட்டில் அதிக ஒளிரும் 754 அடர்மின் விளக்குகள் (எல்.இ.டி) பொருத்த அனுமதி அளிக்கப்படுகிறது.

''உங்கள் தொகுதியில் முதல்வர்'' திட்டத்தில் இளையான்குடி பேரூரா ட்சியில் ஆதி திராவிடர், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை கண்டறிந்து சாலை, ரேசன் கட்டிடம், வடிகால்வாய்கள், அங்கன்வாடி கட்டிடங்கள், தெரு விளக்குகள், பொது மயானம் உள்ளிட்ட வளர்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்ள ரூ7.95 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு கலெக்டர் மூலம் அரசுக்கு சமர்பிக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News