உள்ளூர் செய்திகள்

ஆக்கிரமிப்புகளை அகற்ற கவுன்சிலர்கள் ஒத்துழைக்க கோரி அறிவுறுத்தல்

Published On 2022-09-01 08:40 GMT   |   Update On 2022-09-01 08:40 GMT
  • ஆக்கிரமிப்புகளை அகற்ற கவுன்சிலர்கள் ஒத்துழைக்க வேண்டும் என பேரூராட்சி கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
  • கூட்டத்தில் எழுத்தர் ரேணுகாதேவி மற்றும் வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர்.

திருப்பத்தூர்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தேர்வுநிலை பேரூராட்சி சாதாரண கூட்டம் சேர்மன் கோகிலாராணி நாராயணன் தலைமையில் நடந்தது.

துணை சேர்மன் கான்முகமது, செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். நகரில் பல்வேறு வார்டுகளில் நிலவிவரும் குடிநீர் தட்டுப்பாடு குறித்தும், தொடர் மழையின் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் கழிவு நீர் தேங்கி இருப்பதாகவும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் விரைந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதற்கு பதில் அளித்து பேசிய சேர்மன் நகரின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழையின் காரணமாக தேங்கும் கழிவுநீர் செல்லும் பாதைகள் அடைபட்டு இருப்பதால் கழிவு நீர் தேங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே அனைத்து வார்டுகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வார்டு உறுப்பினர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். அதன் அடிப்படையில் வரும் காலங்களில் ஆக்கிர மிப்புகள் முற்றிலுமாக அகற்றப்பட்டு குடிநீர் பாதைகளும், கழிவு நீர் பாதைகளும் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் முறையாக ஏற்படுத்தி தரப்படும் என்றார். இதில் எழுத்தர் ரேணுகாதேவி மற்றும் வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News