உள்ளூர் செய்திகள்

விழாவில் பங்கேற்ற கர்ப்பிணி பெண்கள் மற்றும் அலுவலர்கள்.

50 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா

Published On 2022-12-01 08:03 GMT   |   Update On 2022-12-01 08:03 GMT
  • சிங்கம்புணரி அருகே 50 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
  • அர்களுக்கு சர்க்கரை பொங்கல், லெமன் சாதம், புளிசாதம், தயிர் சாதம், வெஜிடேபிள் பிரியாணி உள்ளிட்ட 5 வகையான உணவுகள் பரிமாறப்பட்டது.

சிங்கம்புணரி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள ஏரியூரில் திருமலை மருதீஸ்வரர் திருமண மண்டபத்தில் அரசு சார்பில் 50 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா நடந்தது.

சமூகநலன் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணை ந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் ஆகிய துறைகளின் சார்பில் இந்த வளைகாப்பு விழா நடைபெற்றது. ஒன்றிய தலைவர் திவ்யாபிரபு தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

விழாவில் 50 கர்ப்பிணி பெண்களுக்கு மாலை அணிவித்து கன்னத்தில் சந்தனம் பூசி, நெற்றியில் குங்குமமிட்டு, கைகளில் கண்ணாடி வளையல் அணிந்து வளைகாப்பை நடத்தினர். அதனை தொடர்ந்து அவர்களுக்கு சில்வர் கிண்ணம், வாழைப்பழம், மஞ்சள், குங்குமம், ரவிக்கைதுணி, மஞ்சள் கயிறு, தாம்பூலத்தில் வைத்து சீதனமாக வழங்கப்பட்டது.

இதை தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு சர்க்கரை பொங்கல், லெமன் சாதம், புளிசாதம், தயிர் சாதம், வெஜிடேபிள் பிரியாணி உள்ளிட்ட 5 வகையான உணவுகள் பரிமாறப்பட்டது.

இந்த விழாவில் மாவட்ட திட்ட அலுவலர், வட்டார குழந்தைகள் திட்ட அலுவலர், ஏரியூர் ஊராட்சி மன்றத்தலைவர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News