உள்ளூர் செய்திகள்

சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக விளையாட்டு மைதானத்தில் நடந்த குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தேசியக் கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

கலெக்டர் தேசியக்கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Published On 2023-01-26 06:42 GMT   |   Update On 2023-01-26 06:42 GMT
  • சிவகங்கையில் குடியரசு தின விழாவில் தேசியக்கொடியேற்றி நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
  • பள்ளி மாணவ, மாணவி்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிலம்பாட்டம், யோகா மற்றும் கராத்தே உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றது.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக விளையாட்டு மைதானத்தில், இன்று குடியரசு தினவிழா நடந்தது. கலெக்டர் மதுசூதன் ரெட்டி தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்ததுடன், காவல்துறையில் சிறப்பாக பணி புரிந்தமைக்காக 56 காவலர்களுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் பதக்கம் வழங்கினார்.

விழாவில், முன்னாள் படைவீரர் நலத்துறையின் மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 057 மதிப்பீட்டிலும், தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்த்து றையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 62 ஆயிரத்து 500 மதிப்பீட்டிலும், தொழில் வணிகத்துறையின் (மாவட்ட தொழில் மையம்) சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.26 லட்சத்து 91 ஆயிரத்து 576 மதிப்பீட்டிலும் என மொத்தம் 12 பயனாளிகளுக்கு ரூ.30 லட்சத்து 78 ஆயிரத்து 133 மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

மேலும், 59 காவல் துறையைச் சேர்ந்த காவலர்களுக்கும், பல்வேறுத்துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 388 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் நற்சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை கலெக்டர் வழங்கினார்.

பின்னர், பள்ளி மாணவ, மாணவி்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிலம்பாட்டம், யோகா மற்றும் கராத்தே உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றது.

விழாவில் சிவகங்கை எம்.எல்.ஏ. செந்தில்நாதன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கண்ணகி, வருவாய் கோட்டாட்சியர்கள் கு.சுகிதா (சிவகங்கை), பால்துரை (தேவகோட்டை) சுதந்திரப் போராட்டத் தியாகிகள், அரசு அலுவலர்கள், காவல் துறை அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News