உள்ளூர் செய்திகள்

குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

Published On 2022-07-25 12:59 IST   |   Update On 2022-07-25 12:59:00 IST
  • நெற்குப்பை பேரூராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது.
  • குழந்விதைகள் விழிப்புணர்வோடு வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து பாதுகாப்பு நல அலுவலர் பேசினார்.

நெற்குப்பை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சி அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் சேர்மன் புசலான் தலைமையில் நடந்தது.

சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் மகாலட்சுமி இந்த பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளிகளில் கல்வி பயிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு குழந்தைகள் பாதுகாப்பு தன்மையோடு இருப்பது குறித்தும், விழிப்புணர்வோடு வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்தும் பேசினார்.

செயல் அலுவலர் கணேசன், இளநிலை உதவியாளர் சேரலாதன், தலைமை ஆசிரியர் மலர்விழி, ஆசிரியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறை அதிகாரிகள், மகளிர் சுயநிதி குழுக்கள், பேரூராட்சி பணியாளர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News