உள்ளூர் செய்திகள்

தீச்சட்டி எடுத்து வந்த பக்தர்கள்.

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் இன்று இரவு தேரோட்டம்

Published On 2023-04-06 13:54 IST   |   Update On 2023-04-06 13:54:00 IST
  • தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் இன்று இரவு தேரோட்டம் நடந்தது.
  • பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.



சிறப்பு அலங்காரத்தில் தாயமங்கலம் முத்து மாரியம்மன்.

 மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் தாயமங்கலம் முத்துமாரி யம்மன் கோவிலில் பங்குனி பெருந்திருவிழா விழா கடந்த 29-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா நேற்று நடைபெற்றது.

இைதயொட்டி பல்வேறு ஊர்களில் இருந்து வந்த பக்தர்கள் தீச்சட்டி, பால்குடம், ஆயிரங்கண் பானை, கரும்பு தொட்டில் கட்டி வருதல் ஆகிய நேர்த்திக்கடன்களை செலுத்தி பொங்கல் வைத்தும், ஆடு, கோழிகளை பலியிட்டும் வேண்டுதல் களை நிறைவேற்றினர்.

ஏராளமான பக்தர்கள் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை நீண்ட வரிசையில் நின்று முத்து மாரியம்மனை தரிசனம் செய்தனர்.

இன்று (வியா ழக்கிழமை) இரவு 7.15 மணிக்கு மின் அலங்கார தேரோட்டம் நடக்கிறது. நாளை (வெள்ளிக்கிழமை) காலை பால்குடம், ஊஞ்சல் உற்சவம், இரவு பூப்பல்லக்கு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 8-ந்தேதி (சனிக்கிழமை) தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.

விழாவை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன்செட்டியார் மற்றும் அலுவலர் கள், கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.


Tags:    

Similar News