உள்ளூர் செய்திகள்

புத்தகப்பை இல்லா தினம் கடைபிடிப்பு

Published On 2022-11-21 12:42 IST   |   Update On 2022-11-21 12:42:00 IST
  • திருப்பத்தூர் அரசு பள்ளியில் புத்தகப்பை இல்லா தினம் கடைபிடிக்கப்பட்டது.
  • தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பாசிரியர்களின் சொந்த நிதியிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உணவு வழங்கினர்.

நெற்குப்பை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் உள்ள புதுப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் புத்தக பை இல்லா நாள் கொண்டாடப்பட்டது. மாணவ-மாணவிகளுக்கு பாடத்திட்டங்கள் குறித்த அச்சம் மற்றும் அதனால் ஏற்படும் மன அழுத்தம் முதலியவற்றை போக்கும் வகையில் புத்தகப்பை இல்லா நாளாக கடைபிடிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் மாணவ-மாணவிகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் போன்ற புத்தகங்களை எளிமையோடு புரிந்து கொள்ளும் வகையில் செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சிலம்பாட்டம், குங்பூ போன்ற பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பாசிரியர்களின் சொந்த நிதியிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. 

Tags:    

Similar News