உள்ளூர் செய்திகள்

விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.

விவசாய நிலங்களை சேதப்படுத்தும் கோவில் மாடுகளை அப்புறப்படுத்த கோரி கூட்டத்தில் தீர்மானம்

Published On 2023-11-25 09:41 GMT   |   Update On 2023-11-25 09:41 GMT
  • பிரான்மலையில் உள்ள விவசாய நிலங்களை சேதப்படுத்தும் கோவில் மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும்.
  • விவசாயிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சிங்கம்புணரி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே பிரான்மலை தனியார் மண்டபத்தில் வட்டார அளவி லான விவசாயிகள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் கிருங்காக் கோட்டை உள்பட சுற்று வட்டார கிராமங்களில் சிங்கம்புணரி சேவுகப்பெரு மாள் கோவிலை சேர்ந்த 5 ஆயிரம் கோவில் மாடுகள் நிலை கொண்டுள்ளது.

இந்த மாடுகள் இப்பகுதி யில் விவசாயம் செய்யவிடாமல் விவசாயத்தை அழித்து விடுகிறது. இதனால் கடந்த 10 ஆண்டுகளாக விவசாயம் செய்ய முடியாமல் தரிசு நில மாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு உடனடி யாக விவசாயிகள் நலன் கருதி அரசு நடவடிக்கை எடுக்கவும்.

இந்த பகுதியில் சுற்றிதிரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்தி விவசாயம் செழிக்க உதவ வேண்டும். பிரான்மலை வட்டார 20 கிராமங்களை சுற்றி விவசாய பயிர்களை சேதப்படுத்தும் கோவில் மாடுகளை சிங்கம்புணரி சேவுகமூர்த்தி கோவில் நிர் வாகம் பிடித்து பராமரிக்க வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

அரசு மற்றும் நிர்வாகம் இந்த கோவில் மாடுகள் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கோவில் தேவஸ்தான நிர் வாகமும் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தவறும் பட்சத்தில் 20 கிராம விவசாயிகளும் ஒன்று கூடி சாலை மறியல் செய்யப்படும் என தீர் மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News