உள்ளூர் செய்திகள்
காளைகள் முட்டியதில் 39 பேர் காயம்
- திருப்பத்தூர் அருகே ஜல்லிகட்டில் காளைகள் முட்டியதில் 39 பேர் காயமடைந்தனர்.
- திடலில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பூலாங்குறிச்சி கிராமத்தில் அங்காள பரமேசுவரி, கணவாய் கருப்பர் வருடாபிஷேக விழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடந்தது. இதில் பங்கேற்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 600 காளைகளும், 50 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் அடக்க முற்பட்டனர். இதில் காளைகள் முட்டியதில் 39 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு திடலில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக 7 பேர் பொன்னமராவதி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டனர். விழாவில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், கார்த்தி சிதம்பரம் எம்.பி., மாநில ஜல்லிக்கட்டு பாதுகாப்பு பேரவை தலைவர் ஒண்டிராஜ், மாநில இளைஞரணி தலைவர் அருண் ஆகியோர் கலந்து கொண்டனர்.