உள்ளூர் செய்திகள்

பேட்டையில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு

Published On 2022-10-25 13:45 IST   |   Update On 2022-10-25 13:54:00 IST
  • பேட்டையில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் நந்தீஸ்வரனை வெட்டினர்.
  • நந்தீஸ்வரன் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

நெல்லை:

நெல்லை பேட்டையை அடுத்த சத்யா நகரை சேர்ந்தவர் அழகுமலை. இவரது மகன் நந்தீஸ்வரன்(வயது 22). இவர் அங்குள்ள காலனியில் நேற்று இரவு நின்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் நந்தீஸ்வரனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அவர் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின்பேரில் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் 2 பேரையும் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News