பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட காட்சி.
குடிநீர் வழங்க கோரி கடை அடைப்பு- மறியல் போராட்டம்
- சேந்தமங்கலம் அடுத்த கொல்லிமலை அடிவாரம் காரவள்ளி பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கடந்த 2011 - 2013 ஆண்டில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக கிணறு வெட்டப்பட்டது.
- அந்த மனுவில பொதுமக்கள் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து இன்று கொல்லிமலை அடிவாரப்பகுதியான காரவள்ளியில் பொதுமக்கள் கடைகளை அடைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொல்லிமலை:
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த கொல்லிமலை அடிவாரம் காரவள்ளி பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கடந்த 2011 - 2013 ஆண்டில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக கிணறு வெட்டப்பட்டது. இந்த கிணற்றில் இருந்து அப்பகுதியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிநீரை பயன்படுத்தி வந்த னர். அதன்பின் அடுத்து சில ஆண்டுகளில் 7 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கிணற்றை தூர்வாரியும் ஆழப்படுத்தி மின்மோட்டார் வைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த கிணற்றின் அருகா
மையில் உள்ள நிலத்தின் உரிமையாளர் ஞானசே கரன் என்பவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கிணறு தன்னுடையது எனவும் கிணற்றில் இருந்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க முடியாது என மின்மோட்டார் மற்றும் மின்சார வயர்களை அப்புறப்படுத்தி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் குடிநீர் இன்றி தவித்து வந்த அப்பகுதியினர் பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட கலெக்டர் என பலரிடமும் மனு அளித்தனர்.
ஆனால் அந்த மனு தொடர்பாக அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து இன்று கொல்லிமலை அடிவாரப்பகுதியான காரவள்ளியில் பொதுமக்கள் கடைகளை அடைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மேலும் 3 மணி நேரமாக சாலை மறியலில் ஈடுபட்டு வரும் மக்களிடம் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வராத
தால் ஆவேசம் அடைந்த அப்பகுதி மக்கள் தொடர்ந்து
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இச்சம்பவம் சேந்தமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.