சிவசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
சிவசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
- கடந்த 16-ந் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடி கிராமத்தில் சம்பந்த விநாயகர், சிவசித்தி விநாயகர் கோயில்களில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா கடந்த 16-ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. 17-ம் தேதி காலை கணபதி,நவகிரக,லட்சுமி ஹோமமும்,மாலை அங்குரார்பணம், கும்பாலங்காரம்,பூர்ணஹீதி, தீபாரதனை நடைபெற்றது. 18-ம் தேதி காலை யாகபூஜை, கன்னியா பூஜை, மருந்து சாத்துதல் நடந்தது. இன்று யாகசாலை பூஜை, பூர்ணாஹூதி தொடர்ந்து காலை 8.30 மணியளவில் கடங்கள் புறப்பாடு நடைபெற்று காலை 9 மணிக்கு விமானங்கள் மற்றும் கோபுரங்கள் கும்பாபிஷேகமும், தொடர்ந்து மூலஸ்தான கும்பாபிஷேகமும் நடைபெற்றது.
இதில் வேளாக்குறிச்சி 18 - வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.