உள்ளூர் செய்திகள்

சிறுவனுக்கு பாலியல் தொல்லை; 2 மாணவர்கள் போக்சோவில் கைது

Published On 2022-09-16 15:35 IST   |   Update On 2022-09-16 15:35:00 IST
  • சிறுவனை சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 2 மாணவர்கள் அழைத்துக் கொண்டு வெளியில் சென்றுள்ளனர்.
  • அலறல் சத்தம் அக்கம்பக்கத்தில் கேட்டால் பிரச்சினை ஆகிவிடும் என்பதால் 2 மாணவர்களும் சிறுவனை மிரட்டி அனுப்பி உள்ளனர்.

வல்லம்:

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுவன் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுவனை சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த தனியார் மற்றும் அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வரும் 2 மாணவர்கள் அழைத்துக் கொண்டு வெளியில் சென்றுள்ளனர்.

பின்னர் அந்த சிறுவனை தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதனால் அந்த 12 வயது சிறுவன் பயந்து போய் கத்தி உள்ளான். சிறுவனின் அலறல் சத்தம் அக்கம்பக்கத்தில் கேட்டால் பிரச்னை ஆகிவிடும் என்பதால் 2 மாணவர்களும் சிறுவனை மிரட்டி அனுப்பி உள்ளனர். இதுகுறித்து அந்த சிறுவன் தன் பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் செங்கிப்பட்டி போலீசில் புகார் செய்த னர். இதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொ ண்டனர். இதில் நடந்த சம்பவம் உண்மை என்று தெரிய வந்துள்ளது. இதையடுத்து போக்சோ சட்டத்தில் 10ம் வகுப்பு படிக்கும் அந்த 2 மாணவர்களையும் போலீசார் கைது செய்து தஞ்சையில் உள்ள சிறுவர் இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News