திருப்பத்தூர் மேரி இம்மாகுலேட் பள்ளிக்கு ரூ.93 ஆயிரம் மதிப்பில் தையல் எந்திரங்கள்
- தையற்பயிற்சி பெறுவதற்காக தையல் இயந்திரங்களை வழங்குமாறு பள்ளி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்தது.
- 30 தையல் இயந்திரங்களை ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் இராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் வழங்கினார்.
கிருஷ்ணகிரி,
ஐ.வி.டி.பி நிறுவனம், திருப்பத்தூர் நகரில் கல்விப் பணியில் சிறப்புறச் செயலாற்றி வரும் மேரி இம்மாகுலேட் பள்ளியில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர்கள் சுயத்தொழில் கற்று மேன்மையடையும் வகையிலும், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பயன்பெறும் வகையிலும், அவர்கள் தையற்பயிற்சி பெறுவதற்காக தையல் இயந்திரங்களை வழங்குமாறு பள்ளி நிர்வாகம் விடுத்த வேண்டுகோளையேற்று, அப்பள்ளிக்கு ரூ.93 ஆயிரம் மதிப்பிலான 15 தையல் இயந்திரங்களை ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் வழங்கினார்.
3.9.2023 அன்று நடை பெற்ற தையல் எந்திரங்கள் வழங்கும் விழாவில் ஐ.வி.டி.பி நிறுவனத்தின் பங்களிப்பாக ரூ.93 ஆயிரம் மதிப்பிலான 15 தையல் இயந்திரங்கள், பள்ளி நிர்வாகத்தின் பங்களிப்பாக ரூ.93 ஆயிரம் மதிப்பிலான 15 தையல் இயந்திரங்கள் என மொத்தம் ரூ.1.86 இலட்சம் மதிப்பிலான 30 தையல் இயந்திரங்களை ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் இராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் வழங்கினார்.
விழாவிற்கு முன்னிலை வகித்த பள்ளியின் தாளாளர், தலைமை யாசிரியர் மற்றும் பிற ஆசிரியப் பெருமக்கள் விழா விற்கான ஏற்பாடு களைச் சிறப்பாக செய்ததுடன், பெற்றோர்களின் நலனுக்காக தையல் எந்தி ரங்கள் வழங்கியமைக்கு தங்களின் நன்றியை ஐ.வி.டி.பி நிறுவனருக்கு தெரிவித்துக் கொண்டனர். இதுவரை ஐ.வி.டி.பி நிறுவனம் இப்பள்ளிக்கு ரூ.34.2 இலட்சம் மதிப்பிலான உதவிகளை வழங்கியுள்ளது.