உள்ளூர் செய்திகள்

கருப்பு நிறத்தில் தண்ணீர் ஓடியதை பார்த்து ஆற்றில் குளிக்க சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்ததையும், கருப்பு நிறத்தில் காணப்படும் தண்ணீரையும் படத்தில் காணலாம்.

நெல்லை மேலநத்தம் பகுதியில் தாமிரபரணி ஆற்றில் கலந்த சாக்கடை நீர்

Published On 2023-10-28 09:16 GMT   |   Update On 2023-10-28 09:16 GMT
  • மேலப்பாளையம் சுற்று வட்டார பகுதியில் உள்ள கழிவு நீர் நேரடியாக பாளையங்கால்வாயில் கலந்து வருகிறது.
  • மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் உடனடியாக ஆற்றில் நேரடியாக கலக்கும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நெல்லை:

நெல்லை தாமிரபரணி ஆற்றில் சில இடங்களில் அடிக்கடி கழிவு நீர் கலந்து ஓடுகிறது. இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் மேலப்பாளையம் சுற்று வட்டார பகுதியில் உள்ள கழிவு நீர் நேரடியாக பாளையங்கால்வாயில் கலந்து வருகிறது. அந்த சாக்கடை தண்ணீர் மேலநத்தம் பகுதியில் நேரடியாக ஆற்றில் கலந்து நீர், கருப்பு நிறமாக காட்சி அளிக்கிறது என சமூக ஆர்வலர்கள் புகார் கூறி வருகின்றனர்.

இன்று காலை ஆற்றில் குளிக்க சென்ற பொது மக்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சாக்கடை நீர் கலப்பது குறித்து அந்தப் பகுதி கவுன்சிலரிடம் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மேலநத்தம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் அந்த பகுதியில் செல்லும் நீரை பாட்டில்களில் பிடித்து வைத்துள்ளனர். அதனை கலெக்டரிடம் காண்பித்து நிரந்தர தீர்வு காண மனு அளிக்க உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் உடனடியாக ஆற்றில் நேரடியாக கலக்கும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

குடிநீர் ஆதாரமாக விளங்கும் தாமிரபரணி நதியில் கழிவு நீர் கலப்பது குறித்து அவரிடம் கேட்டபோது, இதுபற்றிய தகவல் என்னுடைய கவனத்திற்கு காலையில் வநதது. உடனடியாக மாநகராட்சி ஊழியர்களை அனுப்பி சாக்கடை நீர் தாமிரபரணி நதியில் கலப்பதை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags:    

Similar News