உள்ளூர் செய்திகள்

வெள்ளைவிநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்திய டாஸ்மாக் தொ.மு.ச.வினர்.

செந்தில்குமார் எம்.எல்.ஏ. பிறந்தநாள் வெள்ளைவிநாயகர் கோவிலில் தொ.மு.ச. சிறப்பு வழிபாடு

Published On 2023-10-30 06:15 GMT   |   Update On 2023-10-30 06:15 GMT
  • திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ. பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது பெயருக்கு 108 அர்ச்சனை செய்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
  • தொடர்ந்து மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ. பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட டாஸ்மாக் தொ.மு.ச. சார்பில் மாவட்ட தலைவர் மாரிமுத்து தலைமையிலும், மாவட்ட செயலாளர் கருப்பையா முன்னிலையிலும் திண்டுக்கல் வெள்ளை விநாயகர் கோவிலில் அவரது பெயருக்கு 108 அர்ச்சனை செய்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் பால்ராஜ், பிரச்சார செயலாளர் மார்ட்டின், மாவட்ட துணைத் தலைவர் முருகன், மாவட்ட துணைச் செயலாளர் நாகேந்திரன், செயற்குழு உறுப்பினர்கள் தீனதயாளன், சதீஷ் மணிகண்டன், வேல் முருகன்,பாலமுருகன், டால்பின் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News