சதுரங்க போட்டி வெற்றி குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கம்
- கருத்தரங்கத்திற்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) அண்ணாத்துரை தலைமை தாங்கினார்.
- கருத்தரங்கில் பங்கு பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
நெல்லை:
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுத்துறை முன்னாள் மாணவர் சங்கம் இணைந்து சதுரங்க விளையாட்டு குறித்த 'சதுரங்கத்தில் நிகழ்வு மேலாண்மை நுட்பங்கள்' என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
கருத்தரங்கத்திற்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) அண்ணாத்துரை தலைமை தாங்கினார். பிடே சங்கத்தின் நடுவர் மற்றும் தேசிய பயிற்சியாளருமான கற்பகவள்ளி 'சதுரங்க போட்டியின் நிர்வாக நுட்பங்கள்' என்ற தலைப்பில் மாணவ-மாணவிகளுக்கு தெளிவான முறையில் எடுத்துரைத்தார். கருத்தரங்கில் பங்கு பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. தேசிய பயிற்சியாளர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட பயிற்சியாளருமான சாந்தி 'சதுரங்க போட்டியின் வெற்றிக்கான உத்திகள்' என்ற தலைப்பில் செயல்முறை மூலம் செய்து காண்பித்தார்.
இதில் பல்கலைக்கழக உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுத்துறைத் தலைவர் ஆறுமுகம் வரவேற்று பேசினார். உதவி பேராசிரியர்கள் சேது, துரை ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் உதவிப் பேராசிரியர் பேச்சிமுத்து நன்றி கூறினார். கருத்தரங்கில் மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளின் உடற்கல்வி இயக்குநர்கள், மாணவ- மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.