உள்ளூர் செய்திகள்

பாவூர்சத்திரம் தபால் அலுவலகத்தில் செல்வமகள் சேமிப்பு திட்ட சிறப்பு முகாம் - நாளை மறுநாள் நடைபெறுகிறது

Published On 2023-02-08 13:16 IST   |   Update On 2023-02-08 13:16:00 IST
  • பாவூர்சத்திரம் தபால் அலுவலகத்தில் செல்வ மகள் சிறு சேமிப்பு திட்டம் தொடங்குவதற்கான முகாம் நாளை மறுநாள் (10-ந் தேதி) நடைபெறுகிறது.
  • ஒரு வீட்டில் 10 வயதுக்குட்பட்ட 2 பெண் குழந்தைகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கலாம்.

தென்காசி:

பாவூர்சத்திரம் தபால் அலுவலகத்தில் செல்வ மகள் சிறு சேமிப்பு திட்டம் தொடங்குவதற்கான முகாம் நாளை மறுநாள் (10-ந் தேதி) நடைபெறுகிறது.

10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் உள்ள அனைவரும் இந்த கணக்கை தொடங்கி தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை ஒளிமய மாக்கலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்

ஒரு வீட்டில் 10 வயதுக்குட்பட்ட 2 பெண் குழந்தைகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கலாம். ஆண்டுக்கு 7.6 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தில் 15 ஆண்டுகள் பணம் செலுத்தி விட்டு 21 வருடம் முடிவில் கணக்கை முடித்துக் கொள்ளலாம். இத்திட்டத்தில் செலுத்தும் தொகை மற்றும் முதிர்வுக்கு தொகை வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

ஒரு நிதியாண்டில் ரூ.1 லட்சம் வரை இந்த திட்டத்தின் கீழ் பணம் செலுத்தலாம். இத் திட்டத்தில் இணைய விருப்பமுள்ளவர்கள் பாவூர்சத்திரம் தபால் அலுவலகத்தில் அணுகி விண்ணப்பிக்கலாம் எனவும் பாவூர்சத்திரம் தபால்நிலைய அலுவலர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News