உள்ளூர் செய்திகள்

ரூ.24.64 லட்சத்திற்கு புத்தகங்கள் விற்பனை

Published On 2023-03-07 09:58 GMT   |   Update On 2023-03-07 09:58 GMT
  • நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப் பள்ளியில் புத்தகத் திருவிழா கடந்த மாதம் 28-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
  • தினமும் காலை, மாலை வேளைகளில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், சொற்பொழிவு நடைபெற்று வருகின்றன.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட நிர்வாகம், மாவட்ட நூலகத்துறை, தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப் பள்ளியில் புத்தகத் திருவிழா கடந்த மாதம் 28-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

தினமும் காலை, மாலை வேளைகளில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், சொற்பொழிவு நடைபெற்று வருகின்றன. அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் இந்த புத்தக திருவிழாவை கண்டு களித்து வருகின்றனர்.

செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் புகைப்பட கண்காட்சி, குழந்தைகளுக்கான விளையாட்டு சாதனங்கள் இந்த விழாவில் இடம் பெற்றுள்ளன. இந்த புத்தகத் திருவிழாவில் இடம் பெற்றுள்ள 80 அரங்குகளில் மொத்தம் ரூ. 24 லட்சத்து 64,168 மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை ஆகி உள்ளன.

Tags:    

Similar News