உள்ளூர் செய்திகள்
திருக்காட்டுப்பள்ளியில், வருகிற 3-ந்தேதி மாநில கபடி போட்டிக்கு வீரர்கள் தேர்வு
- மாநில அளவிலான 70-வது சாம்பியன்ஷிப் போட்டி தாம்பரத்தில் நடைபெற உள்ளது.
- கலந்து கொள்ளும் வீரர்கள் எடை 85 கிலோவிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
பூதலூர்:
தஞ்சாவூர் மாவட்ட அமைச்சூர் கபடி கழக செயலாளர் தியாக இளையரசன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
மாநில அளவிலான 70ஆவது சாம்பியன்ஷிப் போட்டி செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் வரும் 5-ம் தேதி முதல் 7ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் தஞ்சை மாவட்ட கபடி அணிக்கான வீரர்கள் தேர்வு திருக்காட்டுப்பள்ளிசர் சிவசாமி ஐயர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நாளை மறுநாள் 3-ம் தேதி (புதன்கிழமை) காலை 8 மணி முதல் நடைபெற உள்ளது.
இதில் கலந்து கொள்ளும் வீரர்கள் எடை 85 கிலோவிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
வயது வரம்பு கிடையாது.
தகுதியான தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தேர்வில் கலந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.