உள்ளூர் செய்திகள்

திருக்குறள் பேச்சுப் போட்டியில் நெல்லை மண்டலத்தை சேர்ந்த 3 மாணவர்கள் தேர்வு

Published On 2023-11-23 14:24 IST   |   Update On 2023-11-23 14:24:00 IST
  • தமிழகத்தில் திருக்குறள் பேச்சு போட்டிகள் மொத்தம் 12 மண்டலங்களில் நடத்தப்பட்டு வருகிறது.
  • நெல்லையில் சாப்டர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பேச்சு போட்டியில், மொத்தம் 110 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

நெல்லை:

தமிழகத்தில் திருக்குறள் பேச்சு போட்டிகள் மொத்தம் 12 மண்டலங்களில் நடத்தப்பட்டு வருகிறது. நெல்லையில் சாப்டர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பேச்சு போட்டியில், மொத்தம் 110 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் இடைநிலைப் பிரிவில் (6, 7, 8 ஆம் வகுப்புகள்) 76 மாணவர்களும், மேல்நிலைப் பிரிவில் (9, 10, 11, 12 ஆம் வகுப்புகள்) 32 மாணவர்களும், கல்லூரிப் பிரிவில் 2 மாணவர்களும் கலந்து கொண்ட நிலையில் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான இறுதிச் சுற்றில் பங்கேற்க 3 பேர் தேர்வாகி உள்ளனர்.

பேச்சுப் போட்டி தவிர மண்டல அளவிலான கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகளும் நடத்தப்பட்டன. கட்டுரைப் போட்டியில் மொத்தம் 110 மாணவர்களும், ஓவியப் போட்டியில் மொத்தம் 111 மாணவர்களும் கலந்து கொண்டனர். ஸ்ரீராம் இலக்கிய கழகம் சார்பில் நடைபெற்ற பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில் சாப்டர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் அருள் தாஸ் ஜெபக்குமார் தலைமை தாங்கினார். ராணி அண்ணா கலைக் கல்லூரியின் முதல்வர் மைதிலி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

Tags:    

Similar News