உள்ளூர் செய்திகள்

மத்தூர் "மா " அரிமா சங்கம் சார்பில் பனை விதை நடுதல்

Published On 2023-10-08 15:29 IST   |   Update On 2023-10-08 15:45:00 IST
  • "மா "அரிமா சங்கத்தின் தலைவர் கிருஷ்ண்மூர்த்தி தலைமை வகித்தார்.
  • அரசு சார்ந்த பல்வேறு பொது சேவையிலும் பொதுமக்களுக்கு உதவிட வேண்டும் என சிறப்புரையாற்றினார்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரில், மத்தூர் "மா "அரிமா சங்கம் சார்பில் அரசுக்கு சொந்தமான நிலங்களில் 5 ஆயிரம் பனை விதைகள் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் விவசாயிகளுக்கு தேன்கூடு அமைத்து கொடுத்தல், மத்தூர் அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளி மாணவிகள் படித்து பயன் பெறும் வகையில் நூலகத்திற்கு புத்தகம் அளித்தல், அதே போல் மத்தூர் குணாமெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மாணவர்களால் இயற்கை முறையில் சமைக்கப்பட்ட சிறு தானிய உணவை பார்வையிட்டு மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தெரிவித்து பரிசளித்தல் உள்ளிட்ட அரசு சார்ந்த பொது சேவை திட்டங்கள் நடைபெற்றன.

இந்நிகழ்ச்சிக்கு மத்தூர் "மா "அரிமா சங்கத்தின் தலைவர் கிருஷ்ண்மூர்த்தி தலைமை வகித்தார்.

நிகழ்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட ஆளுநர் டி.ஆர். தமிழ்மணி கலந்து கொண்டு கவுண்டனூர் ஊராட்சிக்குட் பட்ட அரசு புரம் போக்கு நிலத்தில் தமிழகத்தின் ஆதாரமாக விளங்கும் பனை மரமான பனை விதைகள் நட்டு வைத்து அச்சங்கத்தின் நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும், அரசு சார்ந்த பல்வேறு பொது சேவையிலும் பொதுமக்களுக்கு உதவிட வேண்டும் என சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் மத்தூர் குணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளுரும், தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் குண வசந்தரசு, மத்தூர் ஒன்றியகுழுத் தலைவர் விஜியலட்சுமி பெருமாள், மத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் மீனா சக்தி, கவுண்டனூர் ஊராட்சி மன்றத் தலைவர் பூபதி (பொறுப்பு), மத்தூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கணேசகுமார், சரவணாஸ் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உரிமையாளர் சரவணன், கண்ணன்டஅள்ளி பரணிப் பள்ளியின் தாளாளர் சேகர், குருமார்டன் வே பிரிட்ஜ் உரிமையாளர் திருப்பதி, திமுக.மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் தனசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News