உள்ளூர் செய்திகள்

கடலூர் மாவட்ட கடலோர பகுதியில் கடலோர காவல்படை மாவட்ட காவல் படை சாகர் கவாச் என சொல்லப்படும் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

கடலூர் மாவட்டத்தில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு ஒத்திகை போலீசார் தீவிர கண்காணிப்பு

Published On 2022-06-28 06:58 GMT   |   Update On 2022-06-28 06:58 GMT
  • கடலூர் மாவட்டத்தில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு ஒத்திகை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டனர்.
  • முக்கிய சுற்றுலாத் தலங்கள் கோவில்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடலூர்:

நவம்பர் 26, 2008 மும்பையில் கடல் வழியாக ஊடுருவி வந்த பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் பெரிய அளவில் தாக்குதலை நடத்தினார்கள். அதன் பிறகு இந்தியாவின் கடல் எல்லைகளை தீவிர பாதுகாப்பு வளையத்தில் வைக்க மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிட்டது. அதன்படி தமிழகம் உள்ளிட்ட கடலோர மாநிலங்களில் 6 மாதங்களுக்கு ஒரு முறை பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. தீவிரவாதிகள் வேடமிட்டு கடலோர பாதுகாப்பு குழுமத்தை சேர்ந்த வீரர்கள் கடல் வழியாக வந்து நகர்ப்புற பகுதிக்குள் ஊடுருவி வருவார்கள். அவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து, மடக்கிப்பிடிக்க வேண்டும். இதுதான் பாதுகாப்பு ஒத்திகையின் சிறப்பு அம்சம்.

இன்று காலை 6 மணிக்கு தொடங்கி, 2 நாட்கள் இந்த பாதுகாப்பு ஒத்திகை நடக்கும். கடலூரில் 3 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 8 இன்ஸ்பெக்டர்கள், 15 சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 500 காவலர்கள் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பணியில் போலீசார் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுமத்தினரும் கடல் வழியாக தங்களது ரோந்து படகின் மூலம் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் முக்கிய சுற்றுலாத் தலங்கள் கோவில்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News