உள்ளூர் செய்திகள்

ம.தி.மு.க. தலைமை செயலாளர் துரை வைகோவுக்கு, ஷாநவாஸ் எம்.எல்.ஏ. சால்வை அணிவித்து புத்தகம் வழங்கினார்.

நாகையில் 'மாமனிதன் வைகோ' ஆவணப்படம் திரையிடல் நிகழ்ச்சி

Published On 2022-10-15 09:55 GMT   |   Update On 2022-10-15 09:55 GMT
  • திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றுக்கொன்று எதிரானவை என்பதுபோல் ஒரு கருத்து பரப்பப்படுகிறது.
  • இந்தி திணிப்பு இருக்கும் வரை வைகோ தேவை.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினத்தில் ம.தி.மு.க. தலைமை செயலாளர் துரை வைகோ இயக்கத்தில் உருவான "மாமனிதன் வைகோ" ஆவணப்படம் திரையிடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட ஷா நவாஸ் எம்.எல்.ஏ பேசியதாவது:-

வைகோ பற்றிய ஆவணப்பட த்தை துரை வைகோ சிறப்பாக உருவாக்கியுள்ளார்.

50 ஆண்டுகளுக்கும் மேலான பொதுவாழ்வுக்கு சொந்தக்காரரான வைகோவை பற்றி இன்றைய இளைஞர்களிடம் சரியான புரிதல் இல்லை வைகோவை பற்றி இன்றைய இளைஞர்களிடம் சரியான புரிதல் இல்லை.

அவர்கள் இந்த ஆவணப்படத்தை பார்க்க வேண்டும்.

திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றுக்கொன்று எதிரானவை என்பதுபோல் ஒரு கருத்து பரப்பப்படுகிறது.

அது தவறான கருத்து என்பதற்கு வைகோவின் வாழ்க்கையே சான்று.

அவர் திராவிட இயக்கவாதியாகவும் தமிழ் தேசியவாதியாகவும் பெரும் பங்களிப்புகளை செய்துள்ளார். வைகோவின் போராட்டம் முடிந்துவிடவில்லை.

இந்தி திணிப்பு இருக்கும் வரை வைகோ தேவை. சமூக நீதியை காப்பாற்ற வைகோ தேவை. இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், ம.தி.மு.க. தலைமை செயலாளர் துரை வைகோ, நாகை மாவட்ட தி.மு.க. செயலாளர் கவுதமன், ம.தி.மு.க. நாகை மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், நாகை மாலி எம்.எல்.ஏ, நாகை நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, வி.சி.க. மாவட்ட பொறுப்பாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News