உள்ளூர் செய்திகள்

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினார். 

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுடன் கலந்துரையாடிய பள்ளி மாணவர்கள்: நன்றாக படிக்குமாறு அறிவுரை

Published On 2023-04-28 07:48 GMT   |   Update On 2023-04-28 07:50 GMT
  • போலீஸ் சூப்பிரண்டு மாணவர்களிடம் பொது அறிவு சம்பந்தமான கேள்விகளை கேட்டு கலந்துரையாடினார்.
  • படிக்கும் காலங்களில் ஏதேனும் தொந்தரவுகள் இருந்தால் உடனடியாக பெற்றோரிடம் கூற வேண்டும் எனஅறிவுரை கூறினார்.

கடலூர்:

விருத்தாச்சலம் கல்வி மாவட்டம் தீவலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலா சம்பந்தமாக கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வந்தனர்.மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் மாணவர்களை வரவேற்று இருக்கையில் அமர வைத்தார். பின்னர் மாணவர்களிடம் பொது அறிவு சம்பந்தமான கேள்விகளை கேட்டு கலந்துரையாடினார்.

நானும் அரசு பள்ளியில்தான் படித்தேன். இப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றுகிறேன். நீங்களும் ஒழுக்கத்துடன் நன்றாக படித்து பெரிய பதவி வகிக்க வேண்டும் எனவும், ஒழுக்கம் குறித்தும், படிக்கும் காலங்களில் ஏதேனும் தொந்தரவுகள் இருந்தால் உடனடியாக பெற்றோரிடம் கூற வேண்டும் எனஅறிவுரை கூறினார். பள்ளி மாணவ மாணவியர்களுக்கு குளிர்பானம் கொடுத்தும், பேனா, பென்சில் ,ரப்பர் போன்ற பரிசுப் பொருட்கள் வழங்கி மகிழ்வித்தார்.பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன், ஆசிரியர் ஜோஸ்பின் கீதாஞ்சலி, தன்னாலர்வலர்கள் சுகுணா ,சிந்தனை செல்வி, சமையலர் பார்வதி ஆகியோர் உடன் இருந்தனர். 

Tags:    

Similar News