- பள்ளி வளாகத் தில் சிறுமியை நாய்கள் கடித்ததில் படுகாயமடைந்தார்.
- மாணவியின் கல்விக்கு உதவியாக ரூ 50 ஆயிரத்தை தபால் நிலைய அலுவலகத்தில் டெபாசிட்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை 12-வது வார்டு பட்டாளம்மன்கோயில் தெருவை சேர்ந்தவர் ராணி(வயது 28). கணவரை பிரிந்து கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகள் வனிதா(8), தேன்கனிக்கோட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறாள்.
கடந்த நவம்பர் 18-ம்தேதி, பள்ளி வளாகத் தில் சிறுமியை நாய்கள் கடித்ததில் படுகாயமடைந்தார். இதையடுத்து தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் 10 நாட்கள் சிகிச்சை சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, 12-வது வார்டு கவுன்சிலர் பிரேமா சேகர் , 14-வது வார்டு பேரூராட்சி கவுன்சிலர் கௌரி சென்னீரா ஆகியோர் மாணவியின் கல்விக்கு உதவியாக ரூ 50 ஆயிரத்தை தபால் நிலைய அலுவலகத்தில் டெபாசிட் செய்து அதற்கான வங்கி கணக்கு புத்தகத்தை பேரூராட்சிதலைவர் சீனிவாசன் முன்னிலையில், சிறுமியின் தாய் ராணி யிடம் வழங்கினர்.