உள்ளூர் செய்திகள்

மின்கட்டணம் செலுத்தவில்லை என ஏமாற்றி லிங்க் அனுப்பி ரூ.4½ லட்சம் சுருட்டல்

Published On 2024-12-08 17:50 IST   |   Update On 2024-12-08 17:50:00 IST
  • லிங்கில் சென்று மின் கட்டணத்தை செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
  • சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

சென்னை:

ஆன்லைன் மூலமாக ஏதாவது ஒரு வழியில் பணம் பறிக்கப்படும் சம்பவங்கள் சென்னையில் தினந்தோறும் அரங்கேறி கொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் மின்கட்டணம் செலுத்தவில்லை என்று ஏமாற்றி லிங்க் அனுப்பி பணத்தை சுருட்டும் சம்பவங்களும் அவ்வப்போது நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. இதுபோன்ற மோசடி மூலமாக ரூ.4½ லட்சம் பணம் பறிக்கப்பட்டு உள்ளது.

சென்னை கோட்டூர் கார்டன் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன். இவரது செல்போன் எண்ணுக்கு லிங்க் ஒன்று வந்துள்ளது. அதில் நீங்கள் மின் கட்டணம் செலுத்தாமல் இருக்கிறீர்கள். அதனால் உங்களது வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட வாய்ப்புள்ளது.

அதனை தவிர்க்க லிங்கில் சென்று மின் கட்டணத்தை செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை நம்பி ராஜசேகரன் லிங்கில் சென்று பார்த்துள்ளார். அடுத்த சில நிமிடங்களிலேயே ராஜசேகரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.4 லட்சத்து 60 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜசேகரன் போலீசில் புகார் செய்தார்.

இதுபற்றி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News