உள்ளூர் செய்திகள் (District)

கன்றுகளுக்கு 2981 ரோட்டரி மாவட்ட கால்நடை மருத்துவ முகாம் தலைவர் டாக்டர் வி. பாலகிருஷ்ணன் பூச்சி மருந்து, குடற்புழு நீக்க மாத்திரை செலுத்தினார்.

"கால்நடை கன்றுகள் காப்போம்" இயக்கம் தொடக்கம்

Published On 2022-08-16 09:19 GMT   |   Update On 2022-08-16 09:19 GMT
  • கால்நடைகளுக்கு கொடுக்கும் தீவனம் கன்றுகளுக்கு கொடுக்கக் கூடாது.
  • கன்று பிறந்த ஒன்றரை வயதுக்குள் சினை பக்குவத்திற்கு வர வேண்டும்.

மன்னார்குடி:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள 18 முதல் சேத்தி கிராமத்தில் மிட்டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு "கால்நடை கன்றுகள் காப்போம்" இயக்கம் தொடங்கப்பட்டது.

இந்த விழாவுக்கு மிட்டவுன் ரோட்டரி சங்கம் தலைவர் டி.ரெங்கையன் தலைமை தாங்கினார். 2981 ரோட்டரி மாவட்ட கால்நடை மருத்துவ முகாம் தலைவர் டாக்டர் வி.பாலகிருஷ்ணன் கன்றுகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த தீவனம் வழங்கினார்.

அப்போது அவர் கூறும் போது:- கால்நடைகள், கன்றுகளுக்கு தனி தனியாக தீவனம் கொடுக்க வேண்டும். கால்நடைகளுக்கு கொடுக்கும் தீவனம் கன்றுகளுக்கு கொடுக்கக் கூடாது. ஊட்டச்சத்து நிறைந்த தீவனம் கொடுக்க வேண்டும். கன்று பிறந்த ஒன்றரை வயதுக்குள் சினை பக்குவத்திற்கு வர வேண்டும். 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 75 முகாம்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி செயலாளர் ஜி. கோபாலகிருஷ்ணன், முன்னாள் தலைவர் சி.குருசாமி, ராஜ்மோகன், கே.ஆர். மதிவாணன், சேதுராமன், சுந்தர்ராஜ், குப்புசாமி, ஏ. பன்னீர்செல்வம், மாரியம்மாள், என். மாரிமுத்து, வெங்கடேஷ், கே.ராகவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News