உள்ளூர் செய்திகள்

கலெக்டர் தீபக்ஜேக்கப்

சாா்பதிவாளா் அலுவலக எல்லை சீரமைப்பு கருத்துகேட்பு கூட்டம் 21-ந் தேதி நடக்கிறது

Published On 2023-07-19 15:49 IST   |   Update On 2023-07-19 15:49:00 IST
  • தஞ்சாவூா் பதிவு மாவட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 21 -ந் தேதி நடைபெற உள்ளது.
  • கூட்டங்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

பொதுமக்கள் ஆவண ங்கள் பதிவு செய்தவுடன் தானாகவே பட்டா மாறுதல் செய்வதற்கு ஏதுவாக தஞ்சாவூா் மாவட்டத்துக்கு உள்பட்ட பட்டுக்கோட்டை, கும்பகோணம் பதிவு மாவட்டங்களில் உள்ள சாா் பதிவாளா் அலுவ லகங்களின் எல்லைகள் சீரமைக்கப்படவுள்ளன.

இதுதொடா்பாக பொதுமக்கள் கருத்துகே ட்புக் கூட்டம் கும்பகோணம் பதிவு மாவட்டத்துக்கு கும்பகோணம் வட்டார வளா்ச்சி அலுவலகக் கூட்ட அரங்கில் நாளை (வியாழக்கிழமை ) நண்பகல் 12 மணியளவிலும், பட்டுக்கோட்டை பதிவு மாவட்டத்துக்கு பட்டுக்கோ ட்டை வட்டார வளா்ச்சி அலுவலகக் கூட்ட அரங்கில் வரும் 21 -ம் தேதி ( வெள்ளிக்கிழமை ) நண்பகல் 12 மணியளவிலும், தஞ்சாவூா் பதிவு மாவட்டத்துக்கு மாவட்ட ஆட்சியரகக் கூட்ட அரங்கில் 21 -ம் தேதி பிற்பகல் 3 மணியளவிலும் நடைபெற வுள்ளன.

இக்கூட்டங்களில் பொதுமக்கள் தவறாது கலந்து கொண்டு சாா் -பதிவாளா் அலுவலக எல்லைகளை சீரமைப்பு தொடா்பாக தங்களது கரு த்துகளைத் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News