உள்ளூர் செய்திகள்

தொண்டனந்தல் வனப்பகுதியில் சாராயம் காய்ச்சியவர்களை பகண்டைகூட்டுரோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா கைது செய்தார்.

சங்கராபுரம் பகுதியில் சாராயம் காய்ச்சிய கும்பல்: அதிரடி கைது

Published On 2022-09-21 12:34 IST   |   Update On 2022-09-21 12:34:00 IST
  • சங்கராபுரம் பகுதியில் சாராயம் காய்ச்சிய கும்பல் கைது செய்யப்பட்டனர்.
  • 3 பேரும் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடினர்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம்சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசி ம்மஜோதி தலை மையிலான போலீசார் நெடுமானூர் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த செல்வம் (45) என்பவர் தனது வீட்டின் அருகே சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதைபார்த்த போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். சங்கராபுரத்தை சேர்ந்த வள்ளி (50) என்பவரை சாராயம் விற்றதாக கைது செய்து அவரிடமிருந்து 8 லிட்டர் சாராயத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.  இதே போன்று ரிஷிவந்தியம் அடுத்த தொ ண்டனந்தல் வனப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக, பகண்டைகூட்டுரோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா தலைமையிலான போ லீசார் தொண்டனந்தல் வனப்பகுதியில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மையனூர்கிராமத்தை சேர்ந்த ஜான்பீட்டர், சைமன்லூர்துசாமி (30), விரியூரை சேர்ந்த டேவிட்குமார் (30) ஆகியோர் ஊறல் போட்டு சாராயம் காய்ச்சிக்கொண்டிருந்தது தெரிந்தது. அவர்கள் 3 பேரும் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடினர். இருப்பினும் போலீசார் துரிதமாக செயல்பட்டு சைமன்லூர்துசாமி, டேவிட்குமார் ஆகிய 2 பேரை மட்டும் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 15 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். மற்றும் அங்கிருந்த சாராய ஊறலை கைப்பற்றி கீழே கொட்டி அழித்தனர். தப்பி ஓடிய ஜான்பீட்டரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News