உள்ளூர் செய்திகள்

நகராட்சி கூட்டம் தலைவர் ரேணுபிரியா தலைமையில் நடைெபற்றது.

சுகாதார பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும் நகராட்சி கூட்டத்தில் எம்.எல்.ஏ. ஆலோசனை

Published On 2022-08-30 11:30 IST   |   Update On 2022-08-30 11:30:00 IST
  • சுகாதார பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள நகராட்சி கூட்டத்தில் எம்.எல்.ஏ. ஆலோசனை வழங்கினார்.
  • தேனி பழைய பஸ் நிலையம் வழியாக செல்லும் ராஜவாய்க்கால் தூர்வாருதல் உள்பட பல்வேறு அடிப்படை கோரிக்கைகளை முன்வைத்தனர்.

தேனி:

தேனி அல்லிநகரம் நகராட்சி கூட்டம் நகர் மன்ற தலைவர் ரேணுபிரியா தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் வீரமுத்துக்குமார், துணைத்தலைவர் செல்வம், சுகாதார அலுவலர் அறிவுச்செல்வம், நகராட்சி பொறியாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணகுமார் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் பாலமுருகன், நாராயண பாண்டியன், கடவுள், பிரிட்டிஷ் உள்பட கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் போது 42 கூட்ட பொருள் விவாதிக்கப்பட்டது.

தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் கவுன்சிலர்கள் சுகாதாரம் குடிநீர், சாலை வசதி உள்பட அடிப்படை பிரச்சனைகள் குறித்து கேள்விகள் எழுப்பினார்கள்.

அப்போது சுகாதார பணிகளை தொய்வின்றி சீராக செய்வதற்கு வார்டு வாரியாக மாஸ் கிளீனிங் செய்யலாம் என எம்.எல்.ஏ. ஆலோசனை வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கவுன்சிலர்கள் கோரிக்கை வைக்குமாறு எம்.எல்.ஏ., தெரிவித்தார்.

இதற்கு கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் ஒவ்வொருவராக தங்களது வார்டுகளில் அங்கன்வாடி மையம், ரேசன் கடை, சமுதாயகூடம், கழிப்பிட வசதி, உயர்கோபுர மின்விளக்கு, தெரு மின்விளக்கு, சாலை பராமரிப்பு, குடிநீர் வசதி, மற்றும் தேனி மீறுசமுத்திர கண்மாய் பகுதியில் நடைபாதை மற்றும் படகு சவாரி ஏற்படுத்துதல், தேனி பழைய பஸ் நிலையம் வழியாக செல்லும் ராஜவாய்க்கால் தூர்வாருதல் உள்பட பல்வேறு அடிப்படை கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இதில் 33-வது வார்டு கவுன்சிலர் கடவுள் தனது வார்டு பகுதியில் உள்ள வள்ளுவர் வாசுகி காலனி பகுதியில் உள்ள 200 வீடுகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார் கவுன்சிலர்களின் கோரிக்கைகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் மேற்கொள்ள கூடிய பணிகள் முதற்கட்டமாக நிறைவேற்றவும், அதன் பின்னர் இதர கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags:    

Similar News