உள்ளூர் செய்திகள்

செங்கோட்டை கீழுர் தபால் நிலையத்தையொட்டி பிரதான குறுகிய சாலையில் கொட்டிக்கிடக்கும் மணல், ஜல்லிகள்.

செங்கோட்டை அருகே சாலையில் கொட்டிக்கிடக்கும் மணல், ஜல்லிகள் - நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Published On 2023-03-10 13:48 IST   |   Update On 2023-03-10 13:48:00 IST
  • அரசு தொடக்கப்பள்ளியில் கட்டிட வேலைகள் தற்போது நடைபெற்று பெற்று வருகிறது.
  • ஆனால் பல நாட்களாக அதற்கான பணிகள் நடை பெறாமல் தற்போது வரை சாலையிலேயே மணல், ஜல்லி கற்கள் கொட்டி கிடக்கிறது.

செங்கோட்டை:

செங்கோட்டை கீழுர் பகுதியில் பிரசித்தி பெற்ற அழகிய மனவாள பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு காலை- மாலை என இரு வேளைகளிலும் செங்கோட்டை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.

மேலும் கோவிலை யொட்டி ஏராளமான குடியிருப்பு வாசிகள் வாழ்ந்து வருகின்றனர். இதன் அருகில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியும். அரசு தொடக்கப்பள்ளி, அரசு நடுநிலைப்பள்ளியும் செயல்பட்டு வருகிறது.

இப்பள்ளிகளில் செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களில் இருந்து மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். அவ்வாறு வரும் பள்ளி மாணவர்கள் மற்றும் பக்தர்கள், பொதுமககள் கீழுர் தபால் நிலையத்தை யொட்டி பிரதான குறுகிய சாலையே அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் குறுகிய சாலையையொட்டி உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் கட்டிட வேலைகள் தற்போது நடைபெற்று பெற்று வருகிறது. இதற்கான மணல், ஜல்லி கற்களை கொட்டி உள்ளனர். ஆனால் பல நாட்களாக அதற்கான பணிகள் நடை பெறாமல் தற்போது வரை சாலையிலேயே கொட்டி கிடக்கிறது. இதனால் குடியிருப்பு வாசிகள் அவசர உதவிக்கு கூட ஆட்டோவில் செல்ல முடியாத நிலை உள்ளது.

மேலும் மிக முக்கியமான குறுகிய சாலையே பயன் படுத்தும் பள்ளி மாண வர்கள், பக்தர்கள், குடியிருப்பு வாசிகள் மிகுந்த சிரமத்துடன் கடக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டுள்ளனர். இருப்பி னும் சாலையில் கொட்டி கிடக்கும் மணல், ஜல்லி கற்கள் இன்னும் அகற்றப் படாமல் இருக்கிறது.

எனவே பள்ளி மாண வர்கள், பக்தர்கள் குடி யிருப்பு வாசிகளின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மணல், ஜல்லியை அகற்றி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News