உள்ளூர் செய்திகள்

சம்பா நடவு பணிகளை தொடங்க வயலில் நெல் நாற்றுக்களை வைத்து சாமி கும்பிடும் தொழிலாளர்கள்.

கிணறு தண்ணீர் மூலம் சம்பா நடவு பணிகள் தொடக்கம்

Published On 2023-10-26 10:06 GMT   |   Update On 2023-10-26 10:06 GMT
  • ஆழ் துளை கிணறு தண்ணீர் மூலம் சம்பா சாகுபடி பணிகள் தொடங்கி உள்ளது.
  • விவசாயிகள் தங்கள் வயல்களில் நடவு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

பூதலூர்:

திருக்காட்டுப்பள்ளி பகுதியில் ஆழ் துளை கிணறு தண்ணீர் மூலம் சம்பா சாகுபடி பணிகள் தொடங்கி உள்ளது.

திருக்காட்டுப்பள்ளி மற்றும் பூதலூர் பகுதியில் ஆழ் துளை கிணறு வசதியுள்ள விவசாயிகள் தங்கள் வயல்களில் சம்பா நடவு செய்ய தொடங்கி உள்ளனர்.நடப்பு ஆண்டு கால்வாய் பாசன வசதி பெறும் விவசாயிகள் சம்பா சாகுபடி பணிகளை மேற்கொள்ள முன் தயாரிப்பு பணிகளை மேற்கொள்ளவில்லை.

மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பு மற்றும் வரத்து வெகுவாக குறைந்தது.இதனால் முன் எப்போதும் இல்லாத வகையில் மேட்டூர் அணை குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாக மூடப்பட்டது.

மேட்டூர் அணையில் இருந்து குடி தண்ணீருக்கு மட்டும் 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.காவிரி பாசனபகுதிகளில் சம்பா சாகுபடி பணிகள் கேள்விக்குறியாகி விட்ட நிலையில், திருக்காட்டுபள்ளி பகுதியில் ஆழ் துளை கிணறு வசதியுள்ள விவசாயிகள் சம்பா சாகுபடிக்கு நாற்றங்கால் பணிகளை மேற்கொண்டு உள்ளனர்.

இதிலும் முன்னதாக நாற்றுவிட்டு விவசாயிகள் தங்கள் வயல்களில் நடவு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

வடகிழக்கு பருவமழை நல்ல நிலையில் பெய்தால் மட்டுமே நிலத்தடி நீர்மட்டம் சரிவு காணாமல் சரியாக சாகுபடி மேற்கொள்ள முடியும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News