உள்ளூர் செய்திகள்

கருப்பூர் அருகே முதியவர் மர்ம சாவு

Published On 2023-06-30 15:44 IST   |   Update On 2023-06-30 15:44:00 IST
  • 65 வயது தக்க ஆண் ஒருவர் சாலை யோரம் மயங்கி கிடந்தார்.
  • சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒரு வாரத்திற்குப் பின்னர் அவர் இறந்தார்.

கருப்பூர்:

சேலம் மாவட்டம், கருப்பூர் அருகே உள்ள ஆணை கவுண்டம்பட்டி, பகுதியில் சுமார் 65 வயது தக்க ஆண் ஒருவர் சாலை யோரம் மயங்கி கிடந்தார். அவருக்கு முகம், தலை, கைகளில் காயங்கள் காணப் பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் மோகன், சம்பவ இடத்திற்கு சென்று 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தார்.

பின்னர் ஆம்புலன்ஸில் மீட்டு சேலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு செய்தி சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒரு வாரத்திற்குப் பின்னர் அவர் இறந்தார்.

இதுகுறித்து கருப்பூர் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் பழனிசாமி, வழக்கு பதிவு செய்து இறந்து போன முதியவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்த வர்? அடையாளம் தெரி யாத வா கனம் மோதியதில் இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று விசாரித்து வருகிறார்கள். இறந்து போன முதியவர் உடல் சேலம் அரசு மருத்து வமனையில் வைக்கப்பட் டுள்ளது.

அவரைப் பற்றி ஏதேனும் விவரம் தெரிந்தால் கருப்பூர் காவல் நிலையத்தில் தகவல் சொல்லலாம் என போலீ சார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News