சேலத்தில் அரசு பஸ் கண்ணாடி உடைப்பு
- 2 பேர் போதையில் பஸ் படிக்கட்டில் நின்றிருந்தனர்.
- உள்ளே வர வில்லை என்றால் வேறு வண்டியில் வரும்படி தெரி வித்ததால் இருவரும் படிக் கட்டில் இருந்து பஸ்சுக்குள் வந்தனர்.
சேலம்:
சேலத்தில் இருந்து வலசையூர் நோக்கி நேற்று முன்தினம் இரவு 9.20 மணிக்கு அரசு டவுன் பஸ் சென்றது. அப்போது 2 பேர் போதையில் பஸ் படிக்கட்டில் நின்றிருந்தனர். இதனை பார்த்த கண்டக்டர் செல்வராஜ், இருவரையும் மேலே ஏறி வரும்படி கூறியுள்ளார்.
ஆனால், அவர்கள் அதனை கேட்காமல் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அப்போது உள்ளே வர வில்லை என்றால் வேறு வண்டியில் வரும்படி தெரி வித்ததால் இருவரும் படிக் கட்டில் இருந்து பஸ்சுக்குள் வந்தனர்.
பஸ் கண்ணாடி உடைப்பு
இதனிடையே பஸ் பொன்னம்மாபேட்டை புத்துமாரியம்மன் கோவில் அருகே நின்றது. அப்போது போதை நபர்கள் இருவரும் கீழே இறங்கிய நிலையில் திடீரென அங்கு வந்த 2 மர்ம நபர்கள் பஸ்சின் கண்ணாடி மீது கற்களை வீசி உடைத்து விட்டு தப்பி சென்று விட்டனர்.
இந்த சம்பவத்தால் பஸ்சில் பயணம் செய்த பய ணிகள் அதிர்ச்சி அடைந்த னர். இந்த சம்பவம் குறித்து டிரைவர் நடராஜ், வீராணம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அரசு பஸ்சை சேதப்படுத்திய 4 பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
வழக்குகள் பாய்ந்தது
அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், பஸ்சுக்குள் போதை யில் பயணம் செய்த 2 பேரும், செல்போனில் தொடர்பு கொண்டு பேசி, அங்கு தங்களது நண்பர் களை வரவழைத்து பஸ்சின் கண்ணாடியை உடைத்தி ருப்பது தெரியவந்தது.
இதையடுத்து பஸ் கண்ணாடியை உடைத்த 2 பேர் மற்றும் தகராறில் ஈடுபட்ட போதை நபர்கள் 2 பேர் ஆகியோர் மீது பொதுச் சொத்தை சேதப்ப டுத்துதல், பயணிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு அச்சு றுத்தலை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவு களின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவர்களை போலீ சார் வலைவீசி தேடி வரு கின்றனர்.