உள்ளூர் செய்திகள்

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினத்தையொட்டி தமிழக அரசு சார்பில், சங்ககிரியில் உள்ள நினைவு மண்டபத்தில் அவரது உருவப்படத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய காட்சி. அருகில் கலெக்டர் கார்மேகம் உள்பட பலர் உள்ளனர்.

தீரன் சின்னமலை படத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு மரியாதை

Published On 2023-08-03 14:52 IST   |   Update On 2023-08-03 14:52:00 IST
  • மலைக்கோட்டையின் அடிவாரத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மரியாதை
  • தீரன் சின்னமலை நினைவு மண்டபத்திலும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் மலர் வளையம் வைத்தும் மலர்தூவியும் மரியாதை

சங்ககிரி:

சுதந்திர போராட்ட வீரர் தீரன்சின்னமலை சூழ்ச்சி காரணமாக ஆங்கிலேயர்களால் சிறைபிடிக்கப்பட்டு ஆடி 18 அன்று, சங்ககிரி மலைக்கோட்டையில் தூக்கிலிடப்பட்டார்.

மலர்வளையம்

அவர் தூக்கிலிடப்பட்ட 218-வது நினைவு தினத்தையொட்டி, தமிழக அரசு சார்பில் மலைக்கோட்டையின் அடிவாரத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கும், அதேபோல் ஈரோடு -– பள்ளிபாளையம் பிரிவு சாலையில் அமைக்கப்பட்டுள்ள தீரன் சின்னமலை நினைவு மண்டபத்திலும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் மலர் வளையம் வைத்தும் மலர்தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சின்ராஜ் எம்.பி., சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம், ராஜேந்திரன் எம்.எல்.ஏ., சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் எஸ்.பி., சிவக்குமார், சங்ககிரி ஆர்.டி.ஓ. லோகநாயகி, தாசில்தார் அறிவுடைநம்பி, சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் டி.எம்.செல்வகணபதி, சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், சேலம் மேற்கு மாவட்ட அவைத்தலைவர் தங்கமுத்து, மாவட்ட துணை செயலாளர் சுந்தரம், சம்பத்குமார், சங்ககிரி ஒன்றிய செயலாளர் ராஜேஷ், பேரூராட்சி தலைவர் மணிமொழி முருகன், நகர செயலாளர் முருகன், செயல் அலுவலர் சுலைமான்சேட் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Tags:    

Similar News