கூட்டத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசிய காட்சி. அருகில் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. உள்பட பலர் உள்ளனர்.
கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க வெற்றி பெறும்
- 2024 ஆம் ஆண்டு யார் பிரதமராக வேண்டும் என்பதை விட யார் பிரதமராக வரக்கூடாது என்பதே நோக்கம் என பிரகடனம்
- நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகு திகளிலும் நாம் வெற்றி பெறுவோம்.
சேலம்: சேலம் மத்திய மாவட்ட தி.மு.க சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டம் சேலம் கோட்டை மைதானத்தில் நடந்தது.
செவ்வாய்ப்பேட்டை பகுதி செயலாளர் பிரகாஷ் வரவேற்று பேசினார். மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். நிர்வாகிகள் சுபாஷ், கார்த்திகேயன், மேயர் ராமச்சந்திரன், தலைமைக் கழக வழக்கறிஞர் சூர்யா வெற்றி கொண்டான் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி பேசியதாவது:-
தி.மு.கவையும் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பற்றி யும் பிரதமர் மோடி பேசு வதற்கு காரணம் பா.ஜ.க. விற்கு பயம் வந்துவிட்டது.
2024 ஆம் ஆண்டு யார் பிரதமராக வேண்டும் என்பதை விட யார் பிரதமராக வரக்கூடாது என்பதே நோக்கம் என பிரகடனம் செய்கிறார், அது தான் இந்தியா முழுவ தும் ஒலித்துக் கொண்டி ருக்கிறது. இதனால் வருமான வரித்துறை சி.பி.ஐ, அம லாக்கத்துறை ஆகியவற்றை வைத்து மிரட்டி பார்க்கி றார்கள். தமிழ்நாட்டில் பெண்கள் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். எல்லா பலனையும் பெற்று மகிழ்ச்சியாக இருக்கி றார்கள். செப்டம்பரில் ஒரு கோடி பேருக்கு உதவி தொகை கிடைக்கும். இவர்களே நமக்கு துணை நிற்பார்கள்.வரும் நாடாளு மன்ற தேர்தலில் 40 தொகு திகளிலும் நாம் வெற்றி பெறுவோம். நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும், நாடு நலம்பெறும். முதல்-அமைச்சர் ஸ்டாலின் யாரை கை காட்டுகிறாரோ அவர் தான் அடுத்த பிரதமர் ஆவார். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தாமரை கண்ணன், கே.டி மணி, பொதுக்குழு உறுப்பி னர் நாசர் கான், அண்ணா மலை , மாவட்ட துணை செயலாளர் குமாரவேல் மாநகர செயலாளர் ரகுபதி, அவைத் தலைவர் முருகன், துணை செயலாளர்கள் கணேசன், தினகரன், மண்டல தலைவர்கள் அசோகன், தனசேகர், பகுதி செயலா ளர்கள் சரவணன்,சாந்த மூர்த்தி, தமிழரசன், முருகன், ஜெகதீஷ், ஜெயக்குமார், இளைஞர் அணி அமைப்பா ளர்கள் அருண் பிரசன்னா, கேபிள் சரவணன், பிரசன்னா ரமணன், மாணவரணி அமைப்பாளர் கோகுல் காளிதாஸ், கவுன்சிலர்கள் கோபால், ராஜ்குமார், சீனிவா சன், மூர்த்தி, மோகனப்பிரியா, சங்கீதா, தனலட்சுமி சதீஷ்கு மார், ஒன்றிய செயலாளர்கள் ரெயின்போ நடராஜன், ரமேஷ், செல்வகுமார், அறிவழகன் உள்பட பலர் பங்கேற்றனர்.