உள்ளூர் செய்திகள்

கியூட் இளநிலை நுழைவுத் தேர்வுக்கான தற்காலிக விடைகள் வெளியானது

Published On 2023-06-30 15:26 IST   |   Update On 2023-06-30 15:26:00 IST
  • சுமார் 3 மணி நேரம் 15 நிமிடங்கள் தேர்வு நடைபெற்றது.
  • தற்காலிக விடைகள் என்.டி.ஏ. வெளியிட்டுள்ளது.

சேலம்:

மத்திய மற்றும் மாநில அரசுகளின் முன்னணி பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டபடிப்புகளில் மாணவர்கள் சேர ஒவ்ெவாரு ஆண்டும் பல்கலைக்கழக மானியக்குழு சார்பில் பொது பல்கலைக்கழக நுழைவு தேர்வு (இளநிலை) மத்திய கல்வித்துறை அமைச்ச கத்தின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படு கிறது.

நடப்பாண்டுக்கான தேர்வுக்கு அதிகம் பேர் விண்ணப்பித்ததை தொடர்ந்து நாடு முழுவதும் 271 நகரங்களில் உள்ள 447 மையங்களில் தேர்வு நடைபெற்றது. இதில் பிளஸ்- 2 தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவிகள் திரளானோர் எழுதினர்.

சுமார் 3 மணி நேரம் 15 நிமிடங்கள் தேர்வு நடைபெற்றது. வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்ததாகவும், தடுமாற்றம் இல்லாமல் தேர்வை எதிர்கொண்டதாகவும் மாணவர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர்.

பொதுபல்கலைக்கழக நுழைவு தேர்வு (கியூட்) இளநிலை படிப்புக்கான தற்போது, தற்காலிக விடைகள் என்.டி.ஏ. வெளியிட்டுள்ளது.

மொழி தேர்வு, கணிதம், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், வேதியியல், இயற்பியல், பைன் ஆர்ட்ஸ், வீட்டு அறிவியல், கணினி அறிவியல், கணக்கியல், கலை ஆர்ட்ஸ், மானுடவியல், உயிரியல், வேளாண்மை, உடற்கல்வி, சட்ட படிப்பு, மாஸ் மீடியா, சமூகவியல், வணிக படிப்பு, பொறியியல் வரைகலை, தொழில்முனைவு, உளவியல், கற்பித்தல் திறன் உள்பட அனைத்து படிப்புகளுக்குமான விடை குறிப்புகள் 704 பக்கங்களில் இடம் பெற்றுள்ளன. தேர்வின்போது ஒவ்வொரு கேள்விக்கும் மாணவர்கள் எழுதிய விடைகள் இதில் சரிபார்த்து கொள்ளலாம்.

Tags:    

Similar News