உள்ளூர் செய்திகள்

சேலம் அரசு ஆஸ்பத்திரி அருகில் ஞானம்மாள் என்ற பெண்ணுக்கு ஆவின் பாலகம் அமைக்க அனுமதி அளித்து அதற்கான ஆணையை மேயர் ராமச்சந்திரன் வழங்கிய காட்சி. அருகில் கமிஷனர் கிறிஸ்துராஜ் உள்ளார்.

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ஆவின் பாலகம் அமைக்க அனுமதி

Published On 2022-10-06 08:20 GMT   |   Update On 2022-10-06 08:20 GMT
  • அரசு மோகன் குமார–மங்கலம் மருத்துவமனை நுழைவாயில் அருகில் ஆவின் பாலகம் அமைக்க அனுமதி வேண்டி சேலம் மாவட்டம் மருளையம்பாளையத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மனு அளித்திருந்தார்.
  • இந்த மனுவை மாநகராட்சி ஆணையாளர் முன்னிலையில் மேயர் ராமச்சந்திரன் நேரில் வழங்கினார்.

சேலம்:

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட கோட்டம் எண்.29 நாவலர் நெடுஞ்செழியன் சாலை அரசு மோகன் குமார–மங்கலம் மருத்துவமனை நுழைவாயில் அருகில் ஆவின் பாலகம் அமைக்க அனுமதி வேண்டி சேலம் மாவட்டம் மருளையம்பாளையத்தை சேர்ந்த ஞானம்மாள் என்ற மாற்றுத்திறனாளி மனு அளித்திருந்தார். மனுவினை பரிசீலித்து ஞானம்மாளுக்கு ஆவின் பாலகம் அமைக்க அனுமதி அளித்து அதற்கான ஆணையை மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் முன்னிலையில் மேயர் ராமச்சந்திரன் நேரில் வழங்கினார். அப்போது அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கும், வாகனங்களுக்கும் எவ்வித இடையூறும் இன்றி ஆவின் பாலகம் அமைத்திட வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

அனுமதி ஆணை பெற்ற மாற்றுத்திறனாளி ஞானம்மாள் கூறுகையில், எனக்கு அரசு மருத்துவமனை நுழைவாயில் அருகில் ஆவின் பாலகம் அமைக்க அனுமதி அளித்த முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

Tags:    

Similar News