உள்ளூர் செய்திகள்

சேலம் மாவட்டத்தில் ஆன்லைன் மோசடியாளர்களின் கணக்கிலிருந்து ரூ.4 கோடி மீட்பு

Published On 2022-09-28 09:43 GMT   |   Update On 2022-09-28 09:43 GMT
  • நாடு முழுவதும் ஆன்லைன் பண மோசடி சம்பவங்கள் தொடர்ந்து அதிக அளவில் நடந்து வருகிறது.
  • சைபர் கிராம் போலீசார் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

சேலம்:

நாடு முழுவதும் ஆன்லைன் பண மோசடி சம்பவங்கள் தொடர்ந்து அதிக அளவில் நடந்து வருகிறது. இதனால் அறிமுகமில்லாத நபர்களின் அழைப்பு மற்றும் எஸ்.எம்.எஸ், வாட்ஸ் அப் மெசேஜ்களுக்கு பதிலளிக்க வேண்டாம் என சைபர் கிராம் போலீசார் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

வங்கியில் இருந்து பேசுவதாகவோ செல்போன் நிறுவனங்களிலிருந்து பேசுவதாகவும் கூறி ஆதார் எண், கணக்கு எண், ஓ.டி.பி. விவரங்களை கேட்டால் தெரிவிக்க கூடாது எனவும் அறிவுறுத்தி வருகின்றனர்.அதே வேளையில் ஆன்லைனில் பணத்தை இழந்தால் உடனடியாக 1930 என்ற எண்ணில் புகார் தெரிவித்து சைபர் கிராம் போலீசாரின் உதவியுடன் அந்த பணத்தை மீட்கலாம் எனவும் காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக நடந்த பல்வேறு ஆன்லைன் முறையீடு வழக்குகளில் சைபர் கிரைம் போலீசார் துரிதமாக செயல்பட்டு மோசடியாளர்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை முடக்கி மீண்டும் பாதிக்கப்பட்ட புகாரின் கணக்கில் சேர்த்து வருகின்றனர்.

அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் பணம் இழந்ததாக வந்த பல்வேறு புகார்களின் பேரில் மாவட்ட எஸ்பி ஸ்ரீ அபிநவ் உத்தரவில் சைபர் கிரைம் போலீசார் கூடுதல் எஸ்.பி. செல்ல பாண்டியன், இன்ஸ்பெக்டர் கைலாசம் தலைமையிலான போலீசார் பண மீட்பு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதுவரையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு பணத்தை சுருட்டிய மோசடியாளர்களின் வங்கி கணக்கிலிருந்து 4.6 கோடி ரூபாய் மீட்கப்பட்டு உரியவர்களுக்கு திரும்ப ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Tags:    

Similar News