உள்ளூர் செய்திகள்

புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டிசேலம் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

Published On 2023-09-23 14:42 IST   |   Update On 2023-09-23 14:42:00 IST
  • பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில்களில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
  • சேலம் கோட்டை அழகிரி நாதர் என்று அழைக்கப்படும் கோட்டை பெருமாள் கோவிலில் இன்று காலை சிறப்பு அலங்கார பூஜை, மகா தீபாராதனை நடந்தது.

சேலம்:

சேலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில்க ளில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.

சேலம் கோட்டை அழகிரி நாதர் என்று அழைக்கப்படும் கோட்டை பெருமாள் கோவிலில் இன்று காலை சிறப்பு அலங்கார பூஜை, மகா தீபாராதனை நடந்தது. அதன்பின்னர் அழகிரிநா தர் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

கண்ணாடி மாளிகை

கண்ணாடி மாளிகையில் ராமர், லட்சுமணன், சீதா, ஆஞ்சநேயர் ஊஞ்சல் உற்சவ சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஆஞ்சநேயர், கருடாழ்வாரை பக்தர்கள் வழிபட்டனர். கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல சேலம் சின்னக்கடை வீதியில் உள்ள பட்டை கோவில் பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவிலில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அம்மாபேட்டை சவுந்தர ராஜ பெருமாள் கோவிலில் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சேலம் பெரமனூர் வெங்க டேச பெருமாள் கோவிலில் சிறப்பு அலங்கா ரம் செய்யப்பட்டிருந்தது. ஜாகீர் அம்மாபாளையம் வர பிரசாத ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

துளசி மாலை

ஆனந்தா இறக்கம் அருகே உள்ள லட்சுமி நாராயணசாமி கோவிலில் புரட்டாசி முதல் சனிக் கிழமையையொட்டி சாமிக்கு துளசி மாலை அணிவிக்கப்பட்டது.

சேலம் செவ்வாய்பேட்டை பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து அபி ஷேக வழிபாடு நடை பெற்றது. செவ்வாய்பேட்டை பாண்டுரங்கநாதர் கோவில், அயோத்தி யாப்பட்டணம் ராமர் கோவில், சின்னத் திருப்பதி வெங்கடேச பெரு மாள்கோவில், அழகாபுரம் வெங்கடேசுவரா பாலாஜி டிரஸ்ட் கோவில், உடையாப்பட்டி சென்றாய பெரு மாள் கோவில், கடைவீதி வேணுகோபால சுவாமி கோவில், நாமமலை பெரு மாள் கோவில், நெத்திமேடு கரியபெரு மாள் கோவில் உள்பட பல்வேறு பெருமாள் கோவில்களில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை யொட்டி சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.

Tags:    

Similar News