உள்ளூர் செய்திகள்

ஏற்காட்டுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை

Published On 2023-06-01 09:27 GMT   |   Update On 2023-06-01 09:27 GMT
  • சேலம் மாவட்டத்தில் ஏழையின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் 46-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி கடந்த 21-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடைபெற்றது.
  • இதற்காக சேலத்திலிருந்து 19 சிறப்பு பேருந்துகள் இயங்கி வந்தது.

சேலம்:

சேலம் மாவட்டத்தில் ஏழையின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் 46-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி கடந்த 21-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடைபெற்றது. இதற்காக சேலத்திலிருந்து 19 சிறப்பு பேருந்துகள் இயங்கி வந்தது.

கோடை விழா நிறைவடைந்ததால் சேலத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படவில்லை. ஏற்கனவே கோடை விடுமுறையையொட்டி சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் சிறப்பு பேருந்துகள் ரத்து செய்யப்பட்டதால் சேலம் செல்வதற்கு பஸ் வசதி இல்லாமல் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டனர். இதையடுத்து 100-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் 4 மணி நேரமாக ஏற்காடு பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த சுற்றுலாப் பயணிகள் திடீர் சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த ஏற்காடு போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட சுற்றுலாப் பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி பேருந்து வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இதை தொடர்ந்து ஏற்காட்டுக்கு கூடுதலாக பஸ் இயக்க போக்குவரத்து துறையினர் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். சுற்றுலா பயணிகள் கூட்டத்தை பொருத்து கூடுதல் பஸ் விடவும் நடவடிக்கை எடுக்கபப்ட்டு உள்லது என்று போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News