உள்ளூர் செய்திகள்

ஏற்காட்டில் அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு செய்த காட்சி. 

ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற அமைச்சர் அதிரடி உத்தரவு

Published On 2023-07-14 12:47 IST   |   Update On 2023-07-14 12:47:00 IST
  • சேலம் மாவட்டம் ஏற்காட்டில், சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
  • ஏற்காடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் இயங்கி வரும் தமிழ்நாடு ஓட்டலில் உள்ள தங்கும் அறைகள், உணவகம் போன்றவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஏற்காடு:

சேலம் மாவட்டம் ஏற்காட்டில், சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் இன்று ஆய்வு மேற்கொண்டார். ஏற்காடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் இயங்கி வரும் தமிழ்நாடு ஓட்டலில் உள்ள தங்கும் அறைகள், உணவகம் போன்றவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்பு படகு இல்லத்தில் உள்ள படகுகளை ஆய்வு மேற்கொண்டு அவர், அங்குள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற அதிகாரி களுக்கு உத்தரவிட்டார்.

இந்நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அன்புராஜ், வட்டாச்சியர் தாமோதரன், தமிழ்நாடு ஓட்டல் மேலாளர் கோபி மற்றும் ஒன்றிய கழக ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். 

Tags:    

Similar News