உள்ளூர் செய்திகள்

பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு மற்றும் தேர்ச்சி விகிதம் அதிகம் கொடுத்த ஆசிரியர்களுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பரிசு வழங்கிய காட்சி. அருகில் வக்கீல் ராஜேந்திரன் எம்எல்ஏ மற்றும் அதிகாரிகள் உள்ளனர்.

அறிவை வளர்க்க, பொருளாதாரத்தை ஈட்ட மட்டுமல்ல உரிமைகளை தெரிந்து கொள்ளவும் கல்வி அவசியம்

Published On 2023-07-21 15:07 IST   |   Update On 2023-07-21 15:07:00 IST
  • 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளியின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா சேலத்தில் இன்று நடைபெற்றது.
  • அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ- மாணவிகள் மற்றும் தலைமை ஆசிரியர்க ளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

சேலம்:

தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறை சார்பில் தொட்டுவிடும் தூரத்தில் இலக்கு என்ற திட்டத்தின் கீழ் மாணவ- மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டும் கருத்தரங்கம் மற்றும் அரசு பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற சேலம், கன்னியாகுமரி, கோவை உள்ளிட்ட 15 அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளியின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா சேலத்தில் இன்று நடைபெற்றது.

பழங்குடியினர் நலத்துறை செயலாளர் லட்சுமி பிரியா தலைமையில் நடைபெற்ற விழாவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு, மாவட்ட அளவி லும், மாநில அள விலும் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ- மாணவிகள் மற்றும் தலைமை ஆசிரியர்க ளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

எண்ணிக்கை குறைவு

விழாவில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேசியதாவது:-

தமிழகம் முழுவதும் இந்த துறையின் கீழ் 38 மேல்நி லைப்பள்ளி மற்றும் ஏக லைவா பள்ளியும் செயல்பட்டு வருகிறது. இதன் மூலமாக 2200 மாணவ -மாணவிகள் பயின்று சென்று உள்ளனர். இத்தனை மாணவர்கள் பயின்றாலும் உயர்கல்விக்கு செல்பவர்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

இதனை தவிர்த்து அனை வரும் உயர்கல்வி பயிலும் வகையில் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களை காட்டிலும் உயர்கல்விக்கு செல்பவர்களின் எண்ணிக்கை நமது மாநி லத்தில் அதிகமாக இருந்தா லும், இதனை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சலுகை

வாழ்வில் வெற்றி பெற கல்வியோடு ஒழுக்கம் அவசியம் தேவை. பழங்குடி இன மாணவர்களுக்கு கல்விக்கு பணம் ஒரு தடை யாக இருக்க கூடாது என்ப தற்காகவே, அரசு பல்வேறு சலுகைகளும், திட்டங்களும் செயல்படுத்தி வருகிறது.

முதல்-அமைச்சர் கொண்டு வந்த நான் முதல்வன் திட்டம் என்பது பழங்குடி இன மாணவர்க ளுக்கு மிக பெரிய பலன். தாட்கோ மூலமாக நீட் மற்றும் ஜேஇஇ படிப்பிற்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளுக்கு சென்று படிக்கவும் தாட்கோ மூலமாக உதவி செய்யப்படு கிறது. இதனை பயன்படுத்தி வெளி நாடுகளுக்கு சென்று படிக்கலாம். கல்வி உதவி தொகையுடன் உயர்கல்விக் கான கடன் உதவியும் வழங்கப்பட்டு வருகிறது. இதனையும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். அரசு பள்ளியில் தேர்ச்சி சத விகிதத்தை மேலும் அதிகரிக்க ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் பெற்றோர் பாடுபட வேண்டும்.

படிப்பு என்பது அறிவை வளர்க்க மட்டுமல்ல. பொரு ளாதாரத்தை ஈட்டுவதற்கு மட்டுமல்ல. உரிமைகளை பெறுவதற்காகவும் தான். மாணவ, மாணவிகள் இதனை தெரிந்து கொள்ள வேண்டும். பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கும் உயர்கல்வி கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆலோசனை

தொடர்ந்து பல்வேறு துறையில் சாதனை படித்த வர்கள், கல்வியாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, உயர்கல்விக்கான பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில், பழங்குடியி னர் நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை, சேலம் வடக்கு தொகுதி ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மாநகராட்சி ஆணையாளர் பாலசந்தர், முன்னாள் எம்.எல்.ஏ. சிவ லிங்கம், அயோத்தியாபட்ட ணம் ஒன்றிய குழு தலைவர் ஹேமலதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News